100  நாட்களை பிக்பாஸ் நிகழ்ச்சி தாண்டி விட்டதால், சண்டை, பரபரப்பு ஆகியவை இல்லாமல், சற்று ஜாலியாக செல்கிறது நிகழ்ச்சி. மேலும் நிகழ்ச்சி டல் அடித்து விட கூடாது என்பதற்காக ஒவ்வொரு நாளும், முன்னாள் பிக்பாஸ் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலர் உள்ளே வந்து செல்கிறார்கள்.

இன்றைய தினம், விஜய் டிவி தொகுப்பாளர்கள் உள்ளே வந்துள்ளனர். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பைனல் வரை சென்றுள்ள பிரபலங்கள், பதில் கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே வெளியான ப்ரோமோவில், செரீனிடம் கேள்வி கேட்ட பிரபலங்கள், தற்போது வெளியாகியுள்ள சாண்டியிடன் கேள்வி கேட்க அதற்கு பதில் சொல்கிறார் சாண்டி.

அதாவது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், "உங்கள பத்தி நீங்க தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், உங்களுக்கு இன்னொரு முகம் இருக்கு அதை பார்க்க வேண்டும் என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வாங்க. என தனக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றி கூறுகிறார். அதே போல் சண்டை வரும் போது, பேக் வாங்கிடுவேன் என உண்மையையும் ஜாலியாக சிரித்து கொண்டே ஒப்புக்கொண்டுள்ளார். 

அந்த புரோமோ இதோ...