உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை (அக்டோபர் 4 )அன்று மிக பிரமாண்டமாக தொடங்க உள்ளது.  இந்த  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் அணைத்து தரப்பு ரசிகர்களும். 

இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 100 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, 80 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்து விஜய் டிவி தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஹாட்ஸ்டாரின் டுவிட்டர் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு டுவிட்டில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக்பாஸ் ரசிகா’ என குறிப்பிட்டு ராசி பலன்கள் போன்ற ஒரு பதிவில் 105 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என குறிப்பிட்டுள்ளனர். எனவே பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த முறையும் 105 நாட்கள் பிரபலங்களை பற்றி, ரசிகர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாளை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்குவது உறுதி செய்யப்பட்டாலும், இதில் வழக்கம் போல் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்களா? அதற்கும் குறைவான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Scroll to load tweet…