விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே, தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் அறிமுகமான பலர் இன்று வெள்ளித்திரையில் உச்சத்தை தொட்ட பிரபலங்களாக உள்ளனர்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டும் இன்று, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் 'பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 -வது சீசன் நடத்துவது குறித்து வேலைகளில் நிகழ்ச்சியாளர்கள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், முதல் சீசனை தொகுத்து வழங்கிய ஜூனியர் NTR யிடம் மூன்றாவது சீசனை, தொகுத்து வழங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். காரணம் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கிய, நானி போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினார். இதனால் தற்போது மீண்டும் NTR  தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என நிகழ்ச்சியாளர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

அதே போல் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது துவங்கலாம் என்று தொலைக்காட்சி தரப்பு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கு பிக்பாஸ் வேலைகள் துவங்கி விட்டதால் விரைவில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.