பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியை பார்த்து, மக்கள் ஒவ்வொருவருக்கும் பட்ட பெயர் வைத்து கேலி செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் விளையாடி வரும் போட்டியாளர்களுக்கு காமெடி நடிகர் டானியல் பட்ட பெயர் வைத்து ஜாலியாக கலாய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடிகர் கமல், டானியலிடம் மற்ற போட்டியாளர்கள் பட்ட பெயரை கேட்டு தெரிந்துக்கொண்டார். அப்போது இரண்டு போட்டியாளர்களை தவிர மற்ற அனைவருக்கும் பெயர் வைத்துள்ளதாக கூறிகிறார் டானி. அதன்படி பெயர்களை கூறி, ஏன் அந்த பெயர் வைத்தேன் என்பதையும் கூறினார்.

ஷாரிக் - மாவு மிஷின் (எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பாராம்)

தாடி பாலாஜி - டல்கோ (ஏன் என்றே தெரியாது ஆனால் இந்த பெயர் வைத்து விட்டதாக சொன்னார்)

பொன்னம்பலம் - பெரிய ஜோக் பொன்னம்பலம். (சிறிய காமெடியே சொல்ல மாட்டாராம்)

மம்மதி - நைட்டிங் கேர்ள் (ரெட்டை வால் குருவியை காட்டிய போது அவர் அதை பார்க்காமல் லைட்டை பார்த்து ரசித்தால் இந்த பெயர் வைத்தாராம்)

ரித்விகா - மண்ட கசாயம் (எப்போதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பாராம்)

நித்யா - பீனிக்ஸ் பறவை (நித்யா என அழைத்தால் வர மாட்டார் பீனிக்ஸ் பறவை என்று அழைத்தால் உடனே வருவார் என்று கூறினார்)

ஆனந்த் - இசை (பாடகர் என்பதால் இசை)

ஜனனி - விஷம் (சென்ராயனை தூண்டி விட்டு மும்தாஜ் முன்பு நடனமாட சொன்னதால் இந்த பெயர்)

யாசிகா - தலைவலி மாத்திரை (அனைவருக்கும் தலைவலியை கொடுப்பதால் இந்த பெயர்)

ஐஸ்வர்யா -  ஆமை வடை (ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்து தற்போது பொறுமையாக மாறி விட்டதால் இந்த பெயராம்)

வைஷ்ணவி - டமார் ஜோக் (காதுகளை மூடிக் கொள்ளும் அளவிற்கு காமெடி சொல்வாராம்)

ரம்யா - சூனிய கிழவி (ரம்யாவின் தலைமுடி ஆங்கில படத்தில் வரும் சூனிய கிழவி போல் இருக்கிறதாம்)

மகத் - மூலக் காச்சல் (நீச்சல் குளத்தில் நடந்ததாக ஒரு சம்பவத்தை சொல்லி இந்த பெயர் வைத்தாராம்)

டானியல் - பரோட்டா மாஸ்டர்(மற்றவர்கள் இவருக்கு வைத்துள்ள பெயர் தான் பரோட்டா மாஸ்டர்)

மேலும் சென்ராயனுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்று கூறினார், அதே போல் மும்தாஜ் பார்க்கவே எப்போதும் கோவம்மானவர் போல் இருப்பதால் அவருக்கும் பெயர் வைக்க வில்லை எனினும் அவரை எல்லோரும் மும்மு என்று அழைப்பதாக தெரிவித்தார்.