உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் ஆரம்பத்தில் பல சர்ச்சைகளோடு துவங்கினாலும், பின்பு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.

குறிப்பாக நடிகை ஓவியாவிற்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். ஆனால் ஆரவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்ட,  ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.  பின் அவரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும்படி ரசிகர்கள் கூறிய போதும் தன்னுடைய மன நலம் கருதி ஓவியா அதை மறுத்துவிட்டார்.

பிக் பாஸ் ஒன்று நிகழ்ச்சியை தொடர்ந்து கடந்த வருடம் ஒளிபரப்பான இரண்டாவது சீசன், ஆரம்பத்தில் இருந்தே சற்று டல்லடித்தது. மேலும் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சுயரூபத்தை வெளிக்காட்டாமல் நடித்து வருவதாகவே பரவலாக அனைவரும் கருதினர். எனினும் கடைசியில் சற்று சூடு பிடித்தது பிக் பாஸ் சீசன் 2.

இறுதியில் வெற்றியாளராக நடிகை ரித்விகா அறிவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சி முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில், தற்போது மூன்றாவது சீசனுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 மேலும் இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் 3  தெலுங்கில் சீசனில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ள நிலையில்,  தற்போது தமிழ் பிக்பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள சில போட்டியாளர்கள் பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே  நடிகை கஸ்தூரி பங்கு பெறப் போவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது 'மைனா' படத்தில் வில்லியாக நடித்த சூசன் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து நிகழ்ச்சியாளர்கள் சூசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். விரைவில் பிக்பாஸ் குறித்து அறிவிப்பு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.