முதல் புரோமோவில், கவினை பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்டு அவரை தலைகுனிய வைத்த கஸ்தூரி இரண்டாவது ப்ரோமோவில், ஜோசியம் சொல்லி சாக்ஷியை கடுப்பேற்றி இருக்கிறார்.

இந்த ப்ரோமோவில், இதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கார்டன் ஏரியாவில் கஸ்தூரியை சுற்றி அமர்ந்துள்ளனர். எடுத்ததுமே "பத்த வச்சிட்டியே பரட்டை, என ஒருத்தர் பத்த வச்சிருக்காரு. பிக்பாஸ் வீட்டுக்குள்ள வயல் கார்டா கஸ்தூரி வந்துருக்காங்க. 

"கவினுக்கு பேருல வின் இருந்தாலும் மனசு முழுக்க லாஸ்சத்தான் விரும்புது. என கூறும் போது அனைவரும் சிரிக்க சாக்ஷி மட்டும் முறைக்கிறார். பின் எல்லோரும் லாஸ்லியாவிற்கு ஒரு ஓ போடுங்க என கஸ்தூரி கூற, லாஸ்லியா சிரிக்கும் காட்சி காட்டப்படுகிறது.

இப்படி கலாய்ப்பது, கஸ்தூரியின் ரியல் குணம் தான் என்றாலும், அங்குள்ள போட்டியாளர்களை இது வெறுப்பேற்றுவது போல் உள்ளது. முதல் ப்ரோமோவில் கவினை மட்டும் வச்சி செஞ்ச கஸ்தூரி இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியாவையும் விட்டு வைக்கல பாஸ்.