பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் தலைவராக முடிவு செய்யப்பட்ட, நடிகை  வனிதாவின் தலைவர் பதவி இன்று முதல் அவரிடம் இருந்து பறிக்கப்படுகிறது.

இதனால் புதிய தலைவரை போட்டியாளர்கள் முன்னிலையில் தொகுப்பாளர் கமல்ஹாசன் முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்...  கமலஹாசன் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பும் நான்கு பேர் முன்வரலாம் என கூற, உடனே மீராமிதுன் எழுந்து முன்னாள் வருகிறார். அவரை தொடர்ந்து ரேஷ்மாவும் தலைவர் பதவிக்கு போட்டியிட தயாரானார். மேலும் மோகன் வைத்யா மற்றும் முகன் ஆகியோர்களும் முன்வந்தனர்.

இந்த நிலையில் மோகன் வைத்யாவை தலைவராக்க விரும்புபவர்கள் கையை தூக்கலாம் என்று அறிவிக்கப்பட்டவுடன் சேரன், முகன், சரவணன், கவின் மற்றும் சாண்டி ஆகியோர் கையை தூக்கினர். பெண் வேட்பாளருக்கு இன்னும் நிறைய சான்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் என்று மீராமிதுன் கூறுகிறார்.

இதற்கு பருத்திவீரன் சரவணன் போன முறை கூட பெண் தானே தலைவர் பொறுப்பில் இருந்தவர் என கூற , அசடு வழிய சிரிக்கிறார் மீரா. 

எப்படியும் வயது, அனுபவம் ஆகியவற்றை மனதில் வைத்து மோகன் வைத்தியாவை இந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் தலைவராக தேர்வு செயற் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.