பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், பிக்பாஸ் சீசன் 4 குறித்த பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகவே அடிபட்டு வருகிறது. 

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனையும் வெவ்வேறு தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருவதால், தமிழிலும் நான்காவது சீசனை வேறு ஒரு தொகுப்பாளர் தொகுத்து வழங்க உள்ளதாகவும், இதற்காக நடிகர் சரத்குமார், சிம்பு மற்றும் சூர்யாவுடன் பேச்சுவார்த்தை  நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இப்படி வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என விஜய் டிவி தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கமலுடன் போட்டுள்ள ஒப்பந்தம் என கூறப்படுகிறது. எனவே அடுத்த சீசனையும் கமலஹாசனே தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கபப்டுகிறது.