பிக்பாஸ் வீட்டுக்குள்ள கண்டிப்பா சீசனுக்கு ஒரு காதலாவது வந்துடும், அப்போ தான இந்த நிகழ்ச்சியும் சூடு பிடிக்கும். ஆன இந்த முறை எதிர்பார்த்ததை விட ரொம்ப பாஸ்ட்டா இருக்காங்க போட்டியாளர்கள். 

இவர்கள் நடந்து கொள்ளும் விதம் தான், இவங்க உண்மையிலேயே இப்படியா? அல்ல பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நடிக்கிறாங்களானு தோன வைக்குது. அப்படி என்னதான் நடந்துச்சின்னு கேட்குறீங்களா? சரி வாங்க பார்க்கலாம்...

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி ஒருவாரம் கூட ஆகாத நிலையில, நடிகர் கவினை தான் லவ் பண்ணுவதாக ஷெரினிடம், கூறுகிறார் நடிகை அபிராமி. இது தான் பார்வையாளர்களுக்கு செம ஷாக் ஆக்கி இருக்கு.

அபிராமியை அறிமுகம் செய்தபோது அவரை ஒரு மெச்சூர் பெண்ணாக காண்பித்தனர் பிக்பாஸ் குழுவினர். தன்னுடைய குடும்பத்தை தனது வருமானத்தின் மூலம் காப்பாற்றி வரும் ஒரு பொறுப்புள்ள பெண்ணாகவும், ஒரு மனப்பக்குவம் நிறைந்த பெண்ணாகவும் காண்பித்துவிட்டு, பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே அவர் கவினை காதலிப்பதாக சொல்வது உண்மையா என கேள்வியை எழுப்ப வைத்துள்ளது. என்ன தான் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.