பிக்பாஸ் சீஸன் 3ன் டைட்டில் வின்னர் இன்னும் இரண்டு மணி நேரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஏற்கனவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தர்ஷனுக்கு யாரும் எதிர்பாராத மாபெரும் வாய்ப்பு ஒன்றை மேடையிலேயே அறிவித்தார். அந்த அறிவிப்பைக் கேட்டு பார்வையாளர்கள் மத்தியில் மத்தியில் அமர்ந்திருந்த தர்ஷனின் தாயார் கண்ணீர் விட்டு அழுதார்.

இல்லத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு ஒவ்வொரு பட்டமாக அறிவித்து பரிசளித்து வந்த கமல் தர்ஷனுக்கு ஆல்ரவுண்டர் பட்டம் கொடுத்ததோடு, தனது ராஜ்கமல் நிறுவனத்தில் அவருக்கு பட வாய்ப்பு வழங்குவதாக அறிவித்து தர்ஷனுக்கு பயங்கர இன்ப அதிர்ச்சி அளித்தார். அத்தோடு தனது கையிலிருந்த ராஜ்கமல் நிறுவன முத்திரையை தர்ஷனின் சட்டையில் அணிவித்து சில ஆலோசனைகளும் சொன்னார். அதை ஆனந்தக் கண்ணீருடன் ஏற்றுக்கொண்ட தர்ஷன் ‘இது வின்னர் பட்டத்தை விட எனக்கு ஆயிரம் மடங்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது.

இதுவரைக்கும் என்னோட அம்மா கஷ்டத்துல அழுதுதான் பார்த்துருக்கேன்.இன்னைக்குதான் அவங்க கண்ணுல ஆனந்தக் கண்ணீரை பாக்குறேன்’என்று நெகிழ்ந்தார். அடுத்து அவரது அம்மாவின் கையில் மைக் கொடுக்கப்பட பார்வையார்களுக்கும் கமலுக்கும் நாதழுதழுக்க நன்றி கூறினார் அவர்.