bigboss season 2 list here and there is a change
பெருத்த எதிர்பார்ப்புக்கிடையில் வரும் 17 ஆம் தேதி முதல் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துக் கொள்ளப் போகிறார்கள்..? என்ற ஆவல் எழுந்துள்ளது.
மேலும் சென்ற ஆண்டு நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா சிநேகன் உள்ளிட்ட நபர்கள் மக்களிடேயே அதிக பேசப்பட்டனர்
அதே போன்று இந்த ஆண்டு யாரெல்லாம் எப்படிப்பட்ட விமர்சனதிற்கு ஆளாக உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அந்த வரிசையில், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பெயர் தற்போது வெளியாகி உள்ளது ...
அதில் ஏற்கனவே சொன்ன மாதிரி பவர் ஸ்டார் கலந்துக் கொள்கிறார்..மேலும் சிநேகா ரியாஸ்கான், ரியோராஜ், ரம்பா, கலக்கப்போவது புகழ் பாலா, கிருஷ்ணா, வடிவேலு பாலாஜி உள்ளிட்ட நபர்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் உள்ளவர்கள் கூட கடைசி நேரத்தில் மாறலாம் என தெரிவிக்கப் பட்டு உள்ளது..
இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,சென்ற ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கட்டிப்புடி வைத்தியம் பார்த்த சிநேகன் அவர்கள் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி 2 வில் கலந்துக்கொள்ள உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்து உள்ளது...
தற்போது நடைப்பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 2 நிழ்ச்சிக்கான படப்பிடிப்பு வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
