நீச்சல் குளத்தின் அருகே ஸ்கை புளூ கலர் பிகினில் செம்ம செக்ஸியாக அமர்ந்திருப்பது போன்ற போட்டோ ஒன்றை சாக்‌ஷி அகர்வால் தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் இல்லை. அதனால் தினமும் விவிதமான பிகினியில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, படவாய்ப்புகளை பிடிக்க முயற்சித்து வருகிறார். கலர் கலர் பிகினியில் விதவிதமாக ராய் லட்சுமி கொடுக்கும் ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவில் ரொம்ப பிரபலம். அப்படிப்பட்ட பிகினி பேபி லட்சுமி ராய்க்கே டப் கொடுக்கும் விதமாக சாக்‌ஷி அகர்வால் பதிவிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்‌ஷிக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. சாக்‌ஷியும் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். லேட்டஸ்ட்டாக யானை மீது அமர்ந்து கலர், கலர் உடையில் சாக்‌ஷி அகர்வால் எடுத்த காலண்டர் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 

View post on Instagram

தற்போது நீச்சல் குளத்தின் அருகே ஸ்கை புளூ கலர் பிகினில் செம்ம செக்ஸியாக அமர்ந்திருப்பது போன்ற போட்டோ ஒன்றை சாக்‌ஷி அகர்வால் தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துள்ளார். சில்லாக்ஸ் டு தி மேக்ஸ் என்ற கேப்ஷனுடன் பதிவிடப்பட்டுள்ள அந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. ஸ்விம் ஷூட்டில் சாக்‌ஷி பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் கிளைமேட்டை விட நீங்க தான் சில்லுன்னு இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.