நடிகை ரேஷ்மா:

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சன் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகம் கொடுத்தவர் நடிகை ரேஷ்மா. இதை தொடர்ந்து, 'வாணி ராணி', 'மரகத வீணை', 'உயிர்மெய்' போன்ற பல சீரியல்களில் நடித்தார்.

சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'மசாலா படத்தின் மூலம் அறிமுகமானார்.  இந்த படத்தை அடுத்து இவர் நடித்த 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் இவரின் புஷ்பா கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம்.

மேலும் செய்திகள்: துப்புரவு தொழிலாளருக்கு பாத பூஜை ! நடிகர் விவேக் போட்ட வீடியோவிற்கு குவியும் லைக்குகள்!
 

பிக்பாஸ்:

ரசிகர்களால்  குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட  ரேஷ்மா, கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினர்.  பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறி நியூட்ரல் ரேஷ்மா என பெயர் எடுத்தார்.

கலக்கல் போட்டோஸ்:

அவ்வப்போது,  சமூகவலைதளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு, படவேட்டை நடத்த தொடங்கினார். அதன் பயனாக தற்போது ரேஷ்மா, பேய்மாமா, போடா முண்டம், மை பர்பெக்ட் ஹஸ்பேண்டு ஆகிய மூன்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: அறிகுறியே இல்லை... பிரபல தயாரிப்பாளர் மகளை தாக்கிய கொரோனா! மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை!
 

காதல் சர்ச்சை:

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்தான ரேஷ்மா,  விரைவில் மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொள்ள போவதாக ஒரு தகவல் சமீப காலமாக பரவி வருகிறது. இதுகுறித்து ஒருமுறை கூட ரேஷ்மா, வாய் திறந்து பேசியதே இல்லை.

நடிகை ரேஷ்மாவிற்கு, அவருடைய பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமண வாழ்க்கை சரியாக அமையாமல் கணவரை விட்டு பிரிந்தார். பின் அமெரிக்கா சென்ற இவர், அவ்வபோது திரைப்படங்கள் நடிப்பதற்காக மட்டுமே இந்தியா வந்து சென்றார்.

 மேலும் அமெரிக்காவில் ரேஷ்மாவிற்கு,  ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு,  இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தனர்.  இருவருக்கும்  அழகிய ஆண்குழந்தை ஒன்றும் பிறந்து இறந்தது. இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீரோடு அவர் கூறியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.

 

 

இதை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவருடன் சேர்ந்து வாழாமல் இருக்கும் ரேஷ்மா, அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் ரேஷ்மா நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவரை  காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், ஒரு சில தகவல்கள் உலா வருகிறது.

மேலும் செய்திகள்: பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்!
 

இதனை ரேஷ்மா உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அடிக்கடி நிஷாந்துடன், நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். 

கொரோனாவில் குதூகலம்:

இந்நிலையில் உலகமே கொரோனா பீதியில் நடுங்கி வரும் நிலையில், ரேஷ்மா தன்னுடைய முன்னழகை அப்பட்டமாக காட்டியவாறு, வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம்... நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது. இந்த நேரத்தில் இது தேவையா என்பது கேள்வி எழுப்பிவருகிறார்கள்.