வனிதா இல்லாத பிக்பாஸ் "ஆண்டணி இல்லாத பாட்ஷா" மாதிரி நல்லாவே இல்ல...! 

மீண்டும் வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தால் மிகவும் நல்ல இருக்கும் என மக்கள் சமுக வலைத்தளங்களில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்  

16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்திலேயே வனிதா மீது தொடர் புகார் எழுந்தன. சக போட்டியாளர்களிடம் அடாவடித்தனம், குரலை உயர்த்திப் பேசுவது, தான் பேசியது தான் சரி என தைரியமாக உரக்கச் சொல்வது என அவர் அவராகவே பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.

இன்னும் சொல்லப்போனால் வனிதா இருந்த வரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இரண்டாம் வாரம் வனிதாவை வெளியேற்றப்பட்டார். அதற்கு காரணம் மக்கள் மத்தியில் வனிதாவை பற்றி பரவலாக பேசப்பட்டு வந்த விஷயம் மற்றும் மக்கள் மத்தியில் அவருக்கு கிடைத்த மிக குறைந்த வாக்கு மட்டுமே...

"ஆனால் ஓப்பனிங் நல்லாதான் இருக்கு...பினிஷிங் தான் சொதப்பலா இருக்கு" என்பதற்கு ஏற்ப தூக்கி வெச்சு கொண்டாடிய லாஸ்லியாவை தற்போது கழுவி ஊற்ற தொடங்கி உள்ளனர். அதே சமயத்தில் இன்று வனிதாவுக்கு ஆதரவு பெறுக தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லாஸ்லியாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சில புரோமோக்களை தொடர்ந்து வெளியிடுவதும் பார்க்கப்படுகிறது. இவ்வாறு இன்று வெளியான புரோவிற்கு கீழ், சமூகவலைத்தள வாசிகள் லாஸ் லியாவை  கழுவி ஊற்ற தொடங்கி  உள்ளனர். மேலும் வனிதாவுக்கு பெரும் ஆதரவு பெருகி வருகிறது. அதில் குறிப்பாக, வனிதா இல்லாத பிக்பாஸ் ஆண்டணி இல்லாத பாட்ஷா மாதிரி நல்லாவே இல்ல என வனிதாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். "