பிக்பாஸ் நிகழ்ச்சில் ஒவ்வொரு வாரமும், ஏதேனும் ஒரு போட்டி வைக்கப்பட்டு தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம் தான். அந்த வகையில், வனிதா, மோகன் வைத்தியா, அபிராமி, சாக்ஷி, ஆகியோர் தலைவர் பதவி வகித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த வாரத்திற்கான, தலைவர் போட்டியில் கலந்து கொள்ள சரவணன், தர்ஷன், மற்றும் ரேஷ்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இவர்கள் மூவருக்கும் வித்தியாசமான போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதாவது, தலைவர் போட்டியில் பங்கேற்பவர்கள் பேப்பர் கப்புகளை பிரமீடு போல் அடுக்க வேண்டும். இவரை சப்போர்ட் செய்யாதவர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்மைலி பாலை கொண்டு அந்த பேப்பர் கப்புகளை கலைக்க முயற்சி செய்யவேண்டும்.  அவர்கள் கலைக்கதவாறு, தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆதரவாளர்கள் தடுக்க வேண்டும்.

இந்த போட்டியில் ரேஷ்மா, அதிக கப்புகளை அடுக்கி வெற்றி பெற்றார். எனவே இவரை, அடுத்த வாரத்தின் தலைவராக பிக்பாஸ் அறிவித்தார். பிக்பாஸ் கூறியதுமே, ரேஷ்மாவை மோகன் வைத்தியா வழக்கம் போல் கட்டி பிடித்து, முத்தம் கொடுத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.