உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி ஜூன் மாதம் 23 தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சி துவங்குவதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே போல் இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றிய தகவல்களையும் நிகழ்ச்சியாளர்கள் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ப்ரொமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 நான்காவது ப்ரொமோ வெளியாகியுள்ளது. 

இதில் வயதான ஒருவருக்கு சாப்பாடு வைக்கும் காட்சி காட்டப்படுகிறது. அவர் டிவி -யை பார்க்கும் போது, சார்லி சாப்ளின் மீசை வைத்தது போல் அவர் முகம் டிவியில் தெரிகிறது. இதை பார்த்து, அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாக பார்க்கிறார்கள்.

வழக்கம் போல் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் ஷோவ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம், பார்க்க பார்க்க தான் தெரிகிறது, இது அவர்களுடைய முகம் மட்டும் அல்ல நம்முடைய முகமும் தான் என்று. என்கிற பழைய டயலாக்கை பேசுகிறார். 

இந்த ப்ரொமோ வீடியோ இதோ: