ஜூன் 23 ஆம் தேதி, உலகநாயகன் தொகுத்து வழங்க, விஜய் டிவியின் மிக பிரமாண்டமாக ஆரம்பமாக உள்ளது பிக்பாஸ் சீசன் 3 . 

மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை விட,  இந்த நிகழ்ச்சி பார்க்க பல ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 'பிக்பாஸ்' சீசன் 2  நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என்று ரசிகர்கள் கூறியதை தொடர்ந்து, இம்முறை பல்வேறு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுத்து நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க தயாராக உள்ளனர் நிகழ்ச்சியாளர்கள்.

இதில் கலந்துகொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல்களையும், நிகழ்ச்சியாளர்கள் ரகசியமாக வைத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் புதிய ப்ரோமோ வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், வாரம் ஒரு தலைவர்... டெய்லி ஒரு சண்டை...  யாரு எந்த கட்சியினு பிரிக்கிறதுக்குள்ள 100 நாள் ஓடிடும்.  பிக் பாஸ் 4 days ago என கமலஹாசன் பேசுவது இந்த புதிய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.