Asianet News TamilAsianet News Tamil

காவிரி நீர் விவகாரம் குறித்து மதுமிதா எழுதிய ஒரு கவிதைதான் தற்கொலை தூண்டலுக்குக் காரணமாம்...ஒரு பகீர் பஞ்சாயத்து...

கையை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றதால் பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட மதுமிதா குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அவர் காவிரி நீர் விவகாரம் குறித்து எழுதிய ஒரு கவிதைதான் அத்தனைக்கும் காரணம் என்றும் ஒரு தகவல் நடமாடுகிறது. அதுகுறித்த முகநூல் பதிவு ஒன்று இதோ...
 

bigboss madhumitha suicide issue
Author
Chennai, First Published Aug 19, 2019, 11:00 AM IST

கையை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றதால் பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட மதுமிதா குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அவர் காவிரி நீர் விவகாரம் குறித்து எழுதிய ஒரு கவிதைதான் அத்தனைக்கும் காரணம் என்றும் ஒரு தகவல் நடமாடுகிறது. அதுகுறித்த முகநூல் பதிவு ஒன்று இதோ...bigboss madhumitha suicide issue

பிக் பாஸ் வீட்டில் மதுக்கு நடந்தது என்ன?( என்னுடைய நெட்வொர்க் பல இடங்களில் உள்ளது. அதில் மிக நெருக்கமான ஒரு இடத்தில் இருந்து வந்த நம்பத்தகுந்த தகவல் இது ).Bullying. என்ற விஷயம் பல நாடுகளில் மிக தவறானது. பிக் பாஸ் வீட்டில் ஒப்பந்தம் எழுதி உள்ளே போயிருக்கும் பொழுது பல விஷயங்களை எதிர்க்கொள்ள நேரிடும். மனதுக்கு வைத்த சோதனைதான் அது.மதுக்கு தொடர்ந்து bullying ஆண் , பெண் பிரச்சனை பிறகு நடந்திருக்கு. அவர் மவுன விரதம் இருந்தும் விதி விடவில்லை. சண்டையாக மாறியது.

அன்று குறிப்பிட்ட தினம் நீச்சல் குளத்தில் நீர் இல்லை என்ற விவாதத்தில் அவர் ஒரு கவிதை போல் ஒன்று சொல்லி இருக்கிறார். அது இதுதான்
" வருண பகவானும்
கர்னாடகத்தை சேர்ந்தவர் போல
மழை வடிவில் தமிழகத்துக்கு
தண்ணீர் தர மறுக்கிறாரே"

அவ்ளோதான்..அடங்கி கிடந்த வீடு பற்றிக்கொண்டது. ஷெரின் எப்படி கர்னாடகா பற்றி , காவிரி பற்றி பேச்லாம் என கேட்டுள்ளார்.மது தன்னை தேவதை என்று பட்டம் கட்டிய ஷெரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவருக்கு எதிரான எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவருக்கு தோன்றிய ஒன்றை பகிர்ந்துள்ளார்.ஷெரினுக்கு ஆதரவாய் எல்லாரும் எப்படி இப்படி பேசலாம் , அரசியல் பேச உரிமை இல்லை என்றல்லாம் கத்தி இருக்கின்றனர். அங்கு பொழுது போகாவிடில் அரசியல் எல்லாரும் பேசுவார்கள். கமலே அரசியல் மேடையாக பயன் படுத்துவது தெரிந்ததே..bigboss madhumitha suicide issue

இது வார்த்தைக்கு மேல் வார்த்தை ஆகி வெடித்து இருக்கிறது.சேரனும், கஸ்தூரியும் சரி செய்ய முயன்று உள்ளனர். சேரன் அவள் சின்ன வயதில் இருந்து ஒரு பிரச்சனை கேள்விப்பட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் அவளுக்கு தெரிந்த விதத்தில் பேசியுள்ளார். எனவே பெரிது படுத்த வேண்டாம்.என கோரியுள்ளார்.யாருக்கும் எந்த வார்த்தையும் தேவையில்லை. ஐவர் கூட்டணியுடன்,இவர்களும் சேர்ந்து bullying ல் ஈடுப்பட்டு மதுவை ஒதுக்கி வைத்துள்ளனர்.

இது பார்த்து தாங்க முடியாமல் பிக் பாஸ் இனி அரசியல் பேசக்கூடாது என கடிதம் அனுப்பி உள்ளார்..பின் அது எல்லாம் ஒளிப்பரப்பபடாது என்றும் கூறியுள்ளார்.அதை எதிரணி மதுமிதாக்கு என எடுத்துக்கொண்டு..இன்னும் டீஸ் செய்துள்ளனர்" உனக்கு வச்சான் ஆப்பு பாரு.." இப்படி போன்ற வார்த்தைகள் வந்துள்ளன. இடைவிடாமல் டீஸ் செய்யப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளார். உச்சபட்சமாக வனிதா ஷெரினை அழைத்து வந்து இனி மதுவுடன் யாரும் பேசக்கூடாது,, பழகக்கூடாது..அவர் ஒன்று உள்ளே இருக்கனும்..இல்லாவிடில் நாம் இருக்கனும் என்ற அளவுக்கு சென்றுள்ளது. எல்லாரும் போராடுவோம் என்று கூட்டம் சேர்த்துள்ளார். மது வெளியேறும் வரை யாரும் சாப்பிட வேண்டாம், ஷோவில் பங்கு பெற வேண்டாம் என்று அடுத்தக்கட்டத்திற்கு பிரச்சனையை எடுத்து சென்றுள்ளார்.

பிக் பாஸ் இது எதையும் ஒளிப்பரப்ப போவதில்லை என்ற முடிவு அவர்களுக்கு கூடுதல் துணிவை தந்தது.மிக துணிவான பெண். அத்தனை பேர் கை நீட்டி கத்தியும் அலட்சியனாக வந்தவர்தான். ஒரு நொடி உடைந்து போக..ஏற்கனவே உள்ளே நெடு நாட்களாக இருந்த அழுத்தமும் சேர. இதை எப்படி உலகுக்கு தெரிவிப்பது என புரியாமல் இதை செய்துள்ளார்.சரி நாம் தற்கொலை செய்துக்கொள்வோம். போனாலும் ஒரு தமிழராய் குரல் கொடுப்போம் என அந்த எளிய மனது முடிவெடுத்து இருக்கு. இது அவருக்கு ஆதரவான பதிவு இல்லை. தூண்டும் எதுவும் தவறுதான்.முதல் நாள் மதுவை பாட்டுப்பாடி கடுப்பேத்திக்கொண்டு இருந்துள்ளதும் அழுத்ததை அளித்து இருக்கு. மகிழ்வாய் இருப்பதற்கும் அடுத்தவரை கடுப்பேற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

அனிதா தற்கொலைக்கு அரசாங்கத்தை கண்டிக்கும் பலர் இன்று வரை அனிதாவை கண்டிக்கவில்லை ( நான் கண்டித்தேன்).அதுப்போல் மதுவின் தற்கொலை முயற்சிக்கு பின் அதன் தூண்டல்களை ஏன் கண்டிக்கவில்லை. இரண்டையும் கண்டிக்க வேண்டும். பிக் பாஸ் மது மேல் மட்டும் தவறு என்பதுப்போல் சித்தரித்தது கொடுமைதான்.தற்கொலை முயற்சி கொலைப்போல்தான். தவறுதான்.கொலைக்கு தூண்டியவர்களுக்கு தண்டனை கூடுதல் என்று சட்டமே சொல்கிறது.bigboss madhumitha suicide issue

ஒரு வீட்டில் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றால் போலிஸ் கணவர், மாமியார் என அத்தனைப்பேரையும் விசாரிப்பர்.இங்கு ஏதுமே நடக்காதது போல் அபியை பாட சொல்லி அபிராமி , அபிராமி என்பது சரியா?இதை இத்தனை எளிதாக விஜய் டீவி, , கமல் கையாண்டது மிக தவறு.தற்கொலை தூண்டும் சூழல் பிக் பாஸில் இருக்கு என மனித உரிமை கமிஷனுக்கு யாராவது புகார் கூட அளிக்கலாம்.எனவே அது சம்பந்தமான உண்மை வெளி வர வேண்டும். மதுமிதா மேல் இருக்கும் களங்கம் மாற வேண்டும். அதே சமயம் உள்ளே அதற்கு தூண்டிய அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்.Bullying என்பது மிக மிக தவறு. அது பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ளது.அதை கண்டிக்க வேண்டும்.
முகநூலில்...கிருதிகாதரன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios