பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய சொந்தக்கதை, சோகக்கதையை கூறி மற்ற போட்டியாளர்களை அழ வைத்து வருகிறார்கள்.

இதுவரை ரேஷ்மா, மதுமிதா, கவின், தர்ஷன், என பல போட்டியாளர்கள் தங்களுடைய கதையை கூறியுள்ளனர். அதே போல் இன்றைய தினம், இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா அவருடைய சோகங்களை பகிர்ந்து கொள்ள உள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், இடம்பெற்றுள்ளது. ஆனால் இன்று கமல் தோன்றுவதால், அவர் பேசும் பிரதான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

வழக்கம்போல் புரிந்த மொழியில் புரியாத கருத்துக்களை கூறும் கமல்ஹாசன், 'காத்திருந்து காத்திருந்து கருணை மழை பெய்தது. அன்பாய், உள்ளங்களின் உண்மை முகங்கள், உணர்வுகளை உறுதியோடு பகிர்ந்து கொண்டது ஒரு புதிய குடும்பம் பூத்திருக்கின்றது. குடும்பத்தின் தலைவனாக உங்கள் நான்' என்று கூறி புரமோவை முடித்துள்ளார். என்று என்ன கதையை லாஸ்லியா கூறவுள்ளார் என பொறுத்திருந்து பார்ப்போம்.