விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இரண்டு வாரங்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை, பிக்பாஸ் முதல் இரண்டு சீசனை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி ஆரம்பமான இரண்டாவது நாளே, பிக்பாஸ் ரசிகர்கள் சிலர். இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவிற்கு ஆர்மி துவங்கினர்.   ஆனால் ஒரு சில ரசிகர்கள் லாஸ்லியா எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கிறார். அதற்கு அவர் பிக்பாஸ் வீட்டில் இல்லாமலேயே இருந்திருக்கலாம் என்பது போன்ற கருத்துகளையும் கூறு வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க லாஸ்லியா ஆர்மியை சேர்ந்த ரசிகர்கள் சிலர், அவருடைய கட் அவுட் வைத்து, நடு ரோட்டில் பாலபிஷேகம் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகர்களின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் போன்றவை செய்ய கூடாது என மக்கள் கூறி வரும் நிலையில், லாஸ்லியா ரசிகர்கள் செய்த இந்த விஷயம் பலரிடமும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.