’பிக்பாஸ் நிகழ்ச்சியின் காதல் மன்னன் கவினிடம் கொஞ்சம் கூட நேர்மை இல்லை. தான் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகிவிடக்கூடாது என்கிற ஒரே குறுகிய நோக்கத்தில் அவர் ஆடுவது அத்தனையும் காதல் நாடகங்களே’என்று ட்விட்டரிலேயே சதா குடியிருந்துவரும் நடிகை கஸ்தூரி கலாய்த்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் தான் ப்ளே பாயாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அபிராமியிடம் ஜொல்லு விட்டுக் கொண்டிருந்த கவின், அதன் பின்னர் சாக்ஷியுடன் திருமணம் பற்றி  பேசி நெருக்கமாக  இருந்தார். ஆனால், தற்போது தனது முழு கவனத்தையும் லாஸ்லியாவிடம் தான் திருப்பியுள்ளார். இதனால் எப்போதும் லாஸ்லியாவின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதிலேயே இருக்க பல சேட்டைகளை செய்து வருகிறார். 

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாஸ்லியா, கவினிடம் எனக்கு உன் மீது காதல் எல்லாம் கிடையாது என்று தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார். இதனால் மீண்டும் கவின், சாக்க்ஷியிடம் நெருக்கமாக பேசத் துவங்கிவிட்டார். என்னதான் கவின், இதை எல்லாம் நான் வெறும் ஜாலிக்காக செய்கிறேன் என்று சொன்னாலும் பார்ப்பவர்களுக்கு அவர் பெண்களிடம் வழிவது போல தான் தெரிகிறது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் சாக்க்ஷி இருவருக்கும் ஏதோ காதல் இருப்பது போல பில்ட்டப் கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் கவின் மற்றும் சாக்க்ஷி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கஸ்தூரி,... கவின் சம்பந்தப்பட்ட காட்சிகளில் காதலும் இல்லை, கத்தரிக்காயுமில்லை. நட்போ நல்ல எண்ணமோ கூட இல்லை. தான் நாமினேட் ஆகிவிடக்கூடாது என்ற உஷார் மட்டுமே வெளிப்படுகிறது. இது உண்மையா நாடகமா? என்று பதிவிட்டுள்ளார். இந்த சீஸனில் பிக்பாஸ் அட்டகாசமாக செய்த முதல் குறும்பு இதுதான். 25-ம் நாள் காலையில் போட்ட பாட்டுதான் அது. ‘கரகாட்டக்காரன்’ படத்திலிருந்து “ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க”.தூங்கிக் கொண்டிருந்த அல்லது அப்படி பாவனை செய்து கொண்டிருந்த கவினைத் தவிர மற்ற எல்லோரும் இந்தப் பாடலை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். செம டைமிங். கவினுக்கு மிகப் பொருத்தமான பாடல். இந்த மகிழ்ச்சி அனைவரின் முகத்திலும் தெரிந்தது. கவினுக்கு மட்டுமல்ல, ஊர் தாண்டி வந்திருக்கும் லொஸ்லியா, தர்ஷன், முகின் ஆகியோருக்கும் கூட பொருந்தக்கூடிய பாட்டுதான் இது.பொதுவாக டான்ஸ் ஆடாத சேரன் கூட இன்று மகிழ்ச்சியாக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். கவினின் பிடியிலிருந்து லொஸ்லியா தப்பித்த மகிழ்ச்சியை கொண்டாடினாரோ.. என்னமோ.