பிரபல மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகமானவர் காஜல் பசுபதி. என்ஜினீயரிங் படித்திருந்தாலும், சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக நிகழ்ச்சி தொகுப்பை தேர்வு செய்தார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் மூலம் காஜலுக்கு பல ரசிகர்களும் உருவாகினர்.

இதனால் இவருக்கு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடிக்க, வாய்ப்புகள் கிடைத்தது.  பின் பிரபல நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், சில காலம்  திரையுலகை விட்டு ஒதுங்கியே இருந்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது விவாகரத்து பெற்று காஜல் தன்னுடைய பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 1  நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்று மூலம் போட்டியாளராக உள்ளே நுழைந்தார். பார்க்க மட்டுமே முரட்டு தனமாக தெரியும் காஜல், உள்ளே சென்ற பிறகு குழந்தை போன்ற குணம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. பெரிதாக மக்களின் எந்த எதிர்ப்பையும் சம்பாதிக்காமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு இவர் வெளியே சென்றவுடன் காஜலுக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.  ஆனால்  திடீரென கடந்த சில மாதங்களாக இவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

எப்போதும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவரை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்தனர் என்று கூறலாம்.  இதனை வெளிப்படையாகவே ஒரு ரசிகர் காஜலிடம் கேட்க அதற்கு காஜல் தன்னுடைய நிலை பற்றி மிகவும் பரிதாபமாக கூறியுள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறுகையில் அதிகநேரம் போனில் கேம் விளையாடியதால் தன்னுடைய பார்வை மங்கி விட்டதாகவும், இதனால் சில நாட்கள் போனை மருத்துவர்கள் பார்க்க கூடாது என கூறி விட்டதாக தெரிவித்துள்ளார்.  இதை கேட்டு சில ரசிகர்கள் இருவருக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி  வருகிறார்கள்.