பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள், இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு சில நேரத்தில் போட்டியாளர்கள் மிகவும் கோபமாக சண்டை போட்டு கொண்டாலும், மக்களிடம் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட கூடாது என்பதும் மிகவும் சேப் கேம் ஆடி வருகிறார்கள்.

இதனால் சண்டைகள் குறைந்து விடுகிறது. அதுபோன்ற சமயங்களில் வித்தியாசமான டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது பிக்பாஸ் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளது.

 இதில் வனிதாவிடம் பிக்பாஸ் பேசுகிறார். அதாவது சாக்ஷியை அவர் கைகளாலேயே அவருடைய மேக்அப்பை கலைக்க வைக்க வேண்டும் என்பது தான் வனிதாவுக்கு கொடுத்துள்ள முதல் டாஸ்க்.

வனிதாவும் சாக்ஷியை ஏமாற்றி அவருடைய மேக்கப்பை கலைக்க செய்து, இந்த டாஸ்க்கை வெற்றிகரமாக செய்து முடித்தார். பின் சாக்ஷி பேய் போல் வேடமிட்டு சுற்றும் காட்சிகள் காட்ட படுகிறது. இதை தொடர்ந்து இந்த டாஸ்க் மூலம் இன்னும் என்னென்ன சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கும் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்க்கலாம்.