பிக்பாஸ் வீட்டில் 16 ஆவது போட்டியாளராக உள்ளே நுழைந்து, முதல் நாளே பிரச்சனைக்கு அச்சாரம் போட்டவர், நடிகையும் பிரபல மாடலுமான மீராமிதுன்.

ஏற்கனவே பிரச்சனைகளோடு சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டியில், இவரும் தன்னுடைய பங்கிற்கு, சேரன், அபிராமி, உள்ளிட்டோரிடம் சண்டை வாங்கி வருகிறார். மேலும் அபிராமியை அடுத்து அதிகம் கண்ணீர் விடுவதும் இவராக தான் இருக்கும்.

பிக்பாஸ் வீட்டில் உள்ளே வந்த சில தினங்களிலேயே தன்னை அனைவரும் டார்கெட் செய்வதாக அழுது தீர்த்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கூட, சேரன் பாத்ரூம் கழுவும் விஷயத்திற்கு குறை சொன்னதற்காக தாரை தாரையை கண்ணீர் விட்டார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பிக்பாஸ் வீட்டின் முதல் வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய குடும்பம் பற்றி கூறியபோது. மீரா தன்னுடைய தந்தை பற்றி கூறினார். அப்போது தன்னுடைய அப்பா இறந்து விடுவார் என தெரிந்ததும், அடுத்து என்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். தந்தை இறந்த போது கூட என் கண்களில் கண்ணீர் வரவில்லை என கூறினார்.

அனைத்தையும் தைரியமான பெண்ணாக எதிர்த்து போராடினேன் என கூறினார். ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் பாத்ரூம் பிரச்சனைக்கு கூட அழுது வருவது இவர் நடிக்கிறாரா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் பலர், மீரா மிதுன் மக்களிடம் ஆதரவை பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் அழுகிறாரா? என்கிற கேள்வியுடன் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். சிலர் மீராவின் குட்டு வெளிப்பட்டு விட்டதாகவும் கூறி வருகிறார்கள்.