நடிகை ஹன்சிகா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து மஹா படத்தில், நேற்று முதல் நடிகர் சிம்புவும் இணைந்துள்ளார். கடைசியாக ஹன்சிகா நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியடைந்த நிலையில், இந்த படத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கிறார் ஹன்சிகா.

இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே, தன்னுடைய முன்னாள் காதலன் சிம்புவுடன் இணைந்து நடிக்கவும் ஓகே சொன்னார்.

இந்நிலையில் இந்த படத்தில், ஹன்சிகா - சிம்பு இணைந்து நடனமாட உள்ள பாடலுக்கு, நடிகையும் நடன இயக்குனருமான பிக்பாஸ் காயத்திரி நடனம் அமைக்க உள்ளார். இதனை உறுதி படுத்தும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. 

ஹன்சிகாவின் 50 ஆவது, படமாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பார்வையே காவி உடையில் சுருட்டு பிடிப்பது போல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.