மறைந்த பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயதிரி, தற்போது அதிகப்படியான படங்களில் நடிக்கவில்லை என்றாலும், பல படங்களில் நடன இயக்குனராக இருக்கிறார்.

சார்லி சாப்ளின், மனசெல்லாம் நீயே, விசில், தாராதப்பட்டை, என பல தமிழ் படங்களில் நடித்து, ரசிகர்களால் அறியப்பட்டவர் காயதிரி ரகுராம். திருமணமாகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், திரையுலகில் இருந்து சற்று விலகியே இருந்தார். தற்போது வாய்ப்பு கிடைக்கும் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக மனதை புண்படுத்தும் வகையில் வார்த்தைகள், செய்கைகள், தாக்கி பேசுவது என இவர் நடந்து கொண்ட விதம் இவர் மீது ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் பல எதிர் மறையான விமர்சனங்களை சந்தித்தார். 

இந்நிலையில் காயத்திரி, சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில்... மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்... அதே வேலையில் இது நடக்குமா என்பது போல் ஏக்கத்துடன் பேசி இருந்தது.

திருமணம் ஆகி விவாகரத்து பெற்று விட்டாலும், மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஒரு குழந்தையை பெற்று கொள்ள வேண்டும் என்பதற்காகவே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என் கூறி...  ஆனால் என்ன நடக்கும் என தெரியவில்லை பார்க்கலாம் என சந்தேகத்துடன் கூறியுள்ளர். இவரின் ஆசை நிறைவேற பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள்.