பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது வாரத்தின் முதல் நாளான இன்று, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பாட்டு பாடவா... பார்த்து பேசவா... என்கிற ஒரு டாஸ்கை கொடுக்கிறார் பிக்பாஸ். இது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரிகிறது.

முதல் ப்ரோமோவில், இந்த டாஸ்க் குறித்து மதுமிதா படிக்கிறார். அப்போது இந்த டாஸ்கை செய்ய வரும் கவினுக்கு "நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது' என்கிற பாடல் வருகிறது.

ஏற்கனவே சாக்ஷியிடம் அடிபட்டு திருந்தாத கவின், மீண்டும் அவரை பார்த்தே இந்த பாடலை பாடுகிறார். சாக்ஷியும் ஒரு வித காதல் பார்வை பார்த்து, கவின் பாடும் பாடலை ரசிக்கிறார், அதே நேரத்தில் இந்த பாடலின் சில வரிகளை கேட்டு கோபமும் படுகிறார். பின் இதில் என்ன இருக்கிறதோ அதை தான் நான் பாட முடியும் என கவின் கூற, சாக்ஷி தன் கையில் வைத்திருக்கும் தலையணையை கொண்டு கவின் மீது வீசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.