பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் அனைவரும் நேரடியாக பைனலுக்கு செல்ல வேண்டும் என, கோல்டன் டிக்கெட் டாஸ்கை மேற்கொண்டான். சில கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்ட போதும், முடிந்தவரை வெற்றிபெற முயற்சி செய்தனர் அனைத்து போட்டியாளர்களும்.

இந்நிலையில் இன்று இரவு, யார் அந்த கோல்டன் டிக்கெட்டை பெறுவார் என்பது தெரிய வரும். இதுவரை நடந்து முடிந்த டாஸ்க்குகளில் அதிக புள்ளிகளை பெற்ற போட்டியாளரே இந்த இந்த கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றுவார். ஆனால் இந்த புள்ளிகளில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் ஏற்றப்படலாம்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவிலேயே போட்டியாளர்களை பயமுறுத்தியுள்ளார் கமல்...

இதில் அவர் பேசியதாவது... "கேம் கேம் என்கிற வார்த்தை இந்த நிகழ்ச்சி முழுவதும் வியாபித்து இருக்கிறது. என்ன அந்த கேம்? உடலால் மோதி விளையாடுவதா... அல்ல மனதால் மோதி விளையாடுவதா... இரண்டும் கலந்ததும் தான்.

இதில் மனதால் மோதி விளையாடுபவர்களுக்கே, காயம் அதிகமாக ஏற்பட கூடும். இந்த வெற்றி பயணத்தில் ஒருவர் கோல்டன் டிக்கெட்டை கிடைக்க போகிறது. மற்றொருவருக்கு கனவு களைய  போகிறது என கமல் பேசும் காட்சி தற்போது முதல் ப்ரோமோவில் வெளியாகி உள்ளது. 

முதல் ப்ரோமோவிலேயே கனவு களைந்து ஒரு போட்டியாளர் வெளியேறுவது உறுதி, என கமல் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளதே இவர்களில் பயத்திற்கு காரணம்.