பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கமல் போட்டியாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, உள்ளே வந்தது மட்டும் இன்றி, தன்னுடைய கைகளால் எழுதிய கவிதையை அனைவருக்கும் அன்பு பரிசாக கொடுத்து அசத்தினார்.

அதை தொடர்ந்து, நால்வருக்கும் நெருக்கமான இடங்கள் பற்றியும் நண்பர்கள் பற்றியும், அவர்களுடைய வாழ்த்தும் சிறு குறும்படம் போடப்பட்டது.

அந்த வகையில் முதலாவதாக முகேனின் பற்றிய காட்சிகள் ஒளிபரப்ப பட்டது. குறிப்பாக, பிக்பாஸ் அக்ரிமெண்ட்டுக்கு முகேன் கையெழுத்து போட்ட ஹோட்டலில் இருந்து, அவருடைய நண்பர் பேசினார். பின் அவருடைய வீடு, அழகிய பூனை குட்டி, கிட்டார், ஸ்டூடியோ ஆகியவை காட்டப்பட்டது. பின் அவர் பாடிய ஒரு பாடலை போடும் போது முகேன் கண் கலங்கி அழுதார்.

இதை தொடர்ந்து, ஷெரின் அவருடைய அம்மாவிடம் ஏர்டெல் 4 ஜி மூலம், பேசும் போது... தன்னுடைய நாய் குட்டியை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என ஏக்கத்தோடு கேட்டாரோ அவருடைய ஆசையை நிறைவு செய்ய விதமாக, தற்போது ஆவின் அழகிய நாய் குட்டியை காட்டினார்கள். அதை பார்த்ததுமே... ஷெரின் கண் கலங்கி அழுது விட்டார்.

இவரை தொடர்ந்து, லாஸ்லியாவின் வீடு... அவர் படித்த இன்ஸ்டிடியூட் போன்ற அனைத்து இடங்களும் அந்த குறும்படத்தில் காட்டப்பட்டது. மேலும் லாஸ்லியாவிற்கு அவரை தெரிந்த பலர் தங்களுடைய வாழ்த்துக்களை கூறினர்.

கடைசியாக சாண்டியின் நடன பள்ளி காட்டப்பட்டது. அதில் சாண்டியின் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.