செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

ஸ்லீம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரினின் தோற்றம் நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பட்டது. நாளுக்கு நாள் சூடு பிடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை போல, ஷெரினின் தனது உடல் எடையை கடகடவென குறைக்க ஆரம்பித்தார். சரியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து, பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரின் செம்ம ஸ்லீம்மாக க்யூட்டாக காட்சியளித்தார். 


ஷெரின் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற தர்ஷனுக்காக தான் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் சனம் - தர்ஷன் பஞ்சாயத்து உச்சகட்டத்தில் பற்றி எரிந்த சமயத்தில், ஷெரின் பிகினியில் கூலாக நீச்சல்குளத்தில் கும்மாளம் அடித்த புகைப்படங்கள் வைரலாகின.

ஏற்கனவே டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் போட்டோஸை போட்டு ரசிகர்களை குஷியாக்கி வந்த ஷெரின். தற்போது புதிதாக இணைந்துள்ளது டிக்-டாக்கில், சமீபத்தில் அழகிய அசுரா பாடலுக்கு ஷெரின் நடந்த அன்னநடை வைரலானது. 

 

தற்போது அன்பே... பேரன்பே... பாடலுக்கு சேலை முந்தானையை கழற்றி மாட்டி, சூப்பர் டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஷெரின் அன்பே.. அன்பேன்னு யாரை அழைக்கிறார் என்று நக்கலாக கலாய்த்துள்ளனர்.