தமிழகத்தில் ஒரு கூட்டம் கந்தசஷ்டி கவசத்தை பற்றி தவறாக சித்தரிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலின் செயல் பெரும் அதிருப்தியையும், கண்டனத்தையும் எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து தற்போது இந்து மக்கள் அமைப்புகளும் பாஜக மற்றும் இந்து சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த விஷயம் அரசியலையும் தாண்டி சினிமா உலகத்தினர் குரல் கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளது.

 

இதையும் படிங்க: மீண்டும் திரையில் ஜோடி சேரப் போகும் சூர்யா - ஜோதிகா... சூப்பர் கதையை தயார் செய்து வைத்திருக்கும் இயக்குநர்!!

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலைச் சேர்ந்த செந்திவாசனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் சரணடைந்தார். தற்போது கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை தடை செய்ய வேண்டுமென கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. 

 

இதையும் படிங்க: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான அக்கா மகளா?.... முன்னணி நடிகைகளையே அசர வைக்கும் அழகு...!

தமிழ் கடவுளான முருகனை கொச்சைப்படுத்தியதால் கொந்தளித்து போன திரைப்பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற காமெடி நடிகை மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் கறுப்பர் கூட்டம்  யூ-டியூப் சேனலை தடை செய்ய வலியுறுத்தி ட்வீட் செய்துள்ளார். 

 

இதையும் படிங்க: புதிய காதலருடன் அமலா பால் பகிர்ந்த படுக்கையறை போட்டோ... செம்ம கிளாமரில் வேற லெவல் வைரல்...!

அதில், மதம் மனிதனைப் பண்படுத்தும் ஒரு கருவி. அது பக்தியாளர்களுக்கு மேன்மையான நம்பிக்கை. பிறர் நம்பிக்கையை இகழவும், பழிக்கவும் எந்தக் கூமுட்டை கூட்டத்திற்கும் அனுமதியில்லை. இனியும் சீண்டவேண்டாம் சீர்திருத்த வாதிகளே...என காட்டமாக பதிவிட்டுள்ளார்.