விஜய் தொலைக்காட்சியிலேயே அதிக டிஆர்பியை குவித்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்ற தன் மூலம் ஓஹோ என பேமஸ் ஆனவர் கவின். இவர் ஏற்கனவே அதே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்றவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை தொகுப்பாளினியான லாஸ்லியாவுடன் காதல் வயப்பட்டு, இருவரும் சேர்ந்து அடித்த லூட்டியில் சோசியல் மீடியாவில் ஆர்மிக்கள் தூள் பறந்தது. 

இதையும் படிங்க: "கில்லி" படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபரா இது?... கொழு,கொழு அழகில் கும்முனு நடத்திய ஹாட் போட்டோ ஷூட்...!

இவர்களது காதல் கதையின் அப்டேட் கேட்டு இரண்டு ஆர்மி ரசிகர்களும் காத்திருந்த நிலையில், மரண செய்தி ஒன்று கவின் மற்றும் ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது. கவினின் தீவிர ரசிகரான கமல் என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட கடும் இடுப்பு வலியால் அவதிப்பட்ட அவர், 2 மாத சிகிச்சைக்கு செல்வதால் ட்விட்டரில் பக்கம் வர முடியாது என தனது சக நண்பர்களுக்கு அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: படுக்கையை வாரிச் சுருட்டிக் கொண்டு காட்டிற்கு போன இடுப்பழகி ரம்யா பாண்டியன்... வைரலாகும் ஹாட் போட்டோ...!

இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி கவினுக்கு கிடைத்துள்ளது. இதனால் மனமுடைந்த கவின், வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. நமக்கு நேரம் எப்போது வரும் என்றே தெரியாது. அதனால் நமக்குடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். கமலின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.