பிரபல நடிகை அமலா பால் ஆடையில்லாமல் ஆடை படத்தில் நடித்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரும் வரவேற்பை கொடுத்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் தனக்கு கிடைத்த பெயரைத் தொடர்ந்து, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலா பால். இவர் நடிப்பில் உருவாகியுள்ள அதே அந்த பறவை போல திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் அமலா பாலை அடுத்து கொஞ்சம் கூட ஆடையில்லாமல் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளதாக வெளியான தகவல் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு படவாய்ப்புகள் வரிசைகட்டி நின்று கதவை தட்டும் என எதிர்பார்த்தார் ஐஸ்வர்யா தத்தா. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்றும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். 

தற்போது இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. பப்ஜி விளையாட்டை மையமாக வைத்து காமெடி பிளஸ் திரில்லர் கதையம்சத்துடன் படம் உருவாகி வருகிறது. 

இந்த கதைக்கு தேவைப்பட்டதால் ஆடையில்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளராம் ஐஸ்வர்யா தத்தா. இதற்கான ஷூட்டிங் நேற்று முன்தினம் நடந்து முடிந்துள்ளது. பட வாய்ப்பிற்காக அரைகுறை ஆடையில் போட்டோ ஷூட் நடந்தி வந்த ஐஸ்வர்யா தத்தா, தனது கேரக்டருக்காக இப்படியும் கூட நடிப்பாரா? என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளக்கின்றனர்.