பிக்பாஸ் வீட்டில் தற்போது விருந்தினர்களாக முன்னால் போட்டியாளர்கள் 5 பேர் வந்துள்ளதால் ஏற்கனவே சுவாரஸ்யமாக சென்ற நிகழ்ச்சி மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதனால் ரசிகர்களும் குஷியாகியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் ஒரு விபரீதம் நடந்துள்ளது காட்டப்படுகிறது. 

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு புதிதாக ஏதோ ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதற்காக அனைவருக்கும் பலூன் கொடுப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவை வைத்து பார்த்தல் எதிர் அணியிடம் உள்ள பலூன்களை பறித்து வெடிப்பது தான் டாஸ்க் என தெரிகிறது. இதற்காக சிநேகன் பாலாஜின் கையில் உள்ள பலூனை பறிக்க முயற்சிக்கிறார்.

அப்போது கால் வழுக்கி பாலாஜி கீழே விழுகிறார். சிநேகன் மற்றும் சிலர் அவருடன் சேர்ந்து கீழே விழுகிறார்கள். இப்படி விழுந்த போது விஜிக்கு கழுத்தில், பலமாக அடிப்படுகிறது. முதலில் கீழே குனிந்து வலி தாங்க முடியாமல் அழுத விஜி, பின் மயக்கமாகிறார். 

உடனே போட்டியாளர்கள், பிக்பாஸ் மருதிவர்களை அனுப்பி வையுங்கள் என கூச்சல் போடுகிறார்கள். 

இதனால் விஜிக்கு என்ன ஆனது? என்பது தான் பிக்பாஸ் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. விஜய்க்கு என்ன நடந்தது என்பது இன்று இரவு தான் தெரியவரும்.