பிரபல தொலைக்காட்சியில் முதல் முதலாக இந்தியில்  ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் தற்போது இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக TRP -யை பெரும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது.

தமிழ்,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தற்போது இரண்டாவது சீசனை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சி, ஹிந்தியில் 12 ஆவது சீசனுக்கு தயாராகி வருகிறது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் போட்டியாளர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியில் மட்டும் போட்டியாளர்களுக்கு அதிக சலுகை கொடுப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ் 12 ஆவது சீசனில், கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய மனைவி மற்றும் காதலியோடு ஜோடியாக கலந்து கொள்ள உள்ளனர். இதனால் நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட சற்று கிளுகிளுப்பாகவே இருக்கும் என  ஏதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் 7வது சீசனில் பங்கேற்ற போட்டியாளரான பிரபல நடிகை சோபியா ஹயாத்  நிகழ்ச்சி பற்றி சில அதிரடியான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, "பிக்பாஸ் தடை செய்யவேண்டும். அதில் ஆண்கள் பெண்களை அவமானப்படுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்து குழந்தைகளும் கெட்டு போகிறார்கள். மக்கள் பொழுதுபோக்கிற்காக போட்டியாளர்களை வேண்டும் என சண்டை போட வைக்கிறார்கள். வீட்டில் drug பயன்படுத்த அனுமதிக்கிறார்கள். எதுவும் முழுவதும் உண்மையில்லை. எடிட் செய்து மாற்றிவிடுகிறார்கள்" என அவர் கூறியுள்ளார். அதே போல் இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும், பிரபல நடிகர் சல்மான் கான்னையும் விட்டு வைக்காமல் மோசமாக விமர்சித்து  செம டோஸ் விட்டுள்ளார்.