பிக்பாஸ் வீட்டில் இப்போது உள்ள போட்டியாளர்களில், ரசிகர்கள் மனதை கவர்ந்த போட்டியாளராக உள்ளவர்களில் ஒருவர் நடிகர் சரவணன். முதல் வாரத்தில் ஹவுஸ் மேட்ஸ் அவர்களுடைய குடும்பத்தை பற்றி கூறியபோது, இவர் சொன்ன பல விஷயங்கள் ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது.

குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும், இவர் முதல் மனைவி சூர்யா மீது வைத்துள்ள பாசத்தை கண்ணீரால் வெளிப்படுத்தினார். மேலும் அவரை விட்டு கொடுக்காமல் இவர் பேசியது பலரது பாராட்டுகளையும் பெற்றது.

இந்நிலையில், நடிகர் சரவணனின் முதல் மனைவி சூர்யாஸ்ரீ பிரபல ஊடகம் ஒன்றிற்கு, கணவர், குடும்பம், மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசினார். அப்போது இவரிடம் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என நினைக்கிறீர்கள் என்று எழுப்ப பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

பிக்பாஸ் வீட்டில் கடைசி போட்டியாளராக நுழைந்து, வந்த இரண்டாவது நாளே பிரச்னையை ஆரம்பித்த, நடிகையும் மாடலுமான மீரா மிதுன் வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார். இவரின் கணிப்பு நிஜமாகுமா? என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தெரியவரும்.