கடந்த ஜூன் 23-ம் தேதி தமிழில் மிகவும் பிரமாண்டமாக துவங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் தான் இந்த மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

மொத்தம் 16 பிரபலங்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை, பார்த்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், மதுமிதா, உள்ளிட்ட பலர் வெளியேறிவிட்டனர். எனவே தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆட்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. இந்த வாரம் நடிகை கஸ்தூரி வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி துவங்கியது முதல்,  பல சண்டை,  பிரச்சனைகள், எமோஷன், அழுகை, காதல் என அனைத்தும் கலந்த கலவையாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ். 60 நாட்களை தற்போது கடந்துள்ள பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட நடிகை வனிதா மீண்டும்  நுழைந்துள்ளார்.

 

இதனால் இதற்க்கு முன்பு இவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்ட தொகையை விட அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து  தற்போது வெளியாகியுள்ள தகவலில்,  பிக்பாஸ் வீட்டில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக நடிகை வனிதா இருப்பது தெரியவந்துள்ளது.

இவர் ஏற்கனவே 1.5 லட்சம் ஒருநாளைக்கு சம்பளமாக பெற்று வந்த நிலையில் ரீ-என்ட்ரி க்குப்பின் கூடுதலாக ஒரு லட்சம் சம்பளமாக பெறுகிறார்.  இவருக்கு அடுத்ததாக நடிகர் சேரன் ஒரு நாளைக்கு 1 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே 15 லட்சம் அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற பிரபலங்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இதோ...  நடிகர் சரவணன் 80,000 ரூபாய்  ஒரு நாளைக்கு சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தார்.  கவின் 50 ஆயிரமும், தர்ஷன் 50 ஆயிரமும், முகேன் 50 ஆயிரமும், லாஸ்லியா 50 ஆயிரமும் ஒரு நாளைக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.

நடிகை மதுமிதாவுக்கு 80 ஆயிரமும், கஸ்தூரிக்கு 1.25 லட்சமும் ஒரு நாளைக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டு வருவதாக தற்போது வெளியாகியுள்ள தகவல் தெரிவிக்கிறது.