பிக்பாஸ் நிகழ்ச்சியில், நேற்று கமல் கலந்து கொண்டு அனைத்து போட்டியாளர்களையும் சந்தித்து பேசினார். திடீர் என அனைவருக்கும் ஒரு பரிசு ஸ்டோர் ரூமில் உள்ளது. அதனை அனைவரும் சென்று கொண்டுவர வேண்டும் என கூறுகிறார்.

அனைவரும் தங்களுக்கு பிக்பாஸ் பரிசாக கொடுத்த இதயத்தை ஒரு மேசை மேல் வைத்து ஒவ்வொருத்தருக்கு பரிசு கொடுக்க துவங்கினார். மதுமிதா நடிகர் சரவணனுக்கு தன்னை கவர்ந்த மனிதர் என கூறி பிக்பாஸ் கொடுத்த இதயத்தை பரிசாக கொடுக்கிறார். 

அடுத்ததாக நடிகர் சரவணன், டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு கொடுத்து  இவர் தன்னை மாதிரியே இருப்பதாக கூறி இதயத்தை பரிசாக கொடுக்கிறார்.

சாண்டி சித்தப்பு சரவணனுக்கு தன்னுடைய இதயத்தை பரிசாக கொடுக்கிறார்.  இதைத்தொடர்ந்து கவின் சாண்டிக்கு தன்னுடைய இதயத்தை பரிசாகக் கொடுக்கிறார்.  மோகன் வைத்யா சரவணனுக்கு இதயத்தை கொடுக்கிறார். மேலும் இது குறித்து அவர் பேசுகையில் எப்போதும் சந்தோஷமாக தன்னை வைத்திருப்பதாகவும்,  தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும் கூறுகிறார்.

நடிகை சாக்ஷி தனக்கு வந்த இதயத்தை  ஷெரினுக்கு பரிசாக கொடுக்கிறார்.  ஷெரின் தன்னுடைய பரிசை சாக்ஷிக்கு கொடுக்கிறார். அபிராமி முகனுக்கு தன்னுடைய இதயத்தை பரிசாக கொடுக்கிறார்.  முகன் ராவ் தனக்கு கொடுக்கப்பட்ட இதயத்தை இசை வித்வான், மோகன் வைத்தியாவிற்கு பரிசாக கொடுக்கிறார்.

இவரை தொடர்ந்து சேரன் ரேஷ்மாவுக்கு தனக்கு கொடுத்த இதயத்தை பரிசாக கொடுத்து, அவருடைய தாய்மையை மதிப்பதாக கூறுகிறார்.  ரேஷ்மா தனக்கு வந்த இதயத்தை மீரா மிதுனுக்கு பரிசாக கொடுக்கிறார். மீரா தனக்கு பிக் பாஸ் வீட்டில் கிடைத்த முதல் தோழன் தர்ஷன் என்றும்,  அதனால் அவருக்கு இந்த இதயத்தை கொடுப்பதாக கூறுகிறார்.

தர்ஷன், இந்த வீட்டிற்கு வந்ததும் தனக்கு அம்மா போல் கிடைத்த முதல் உறவு பாத்திமா பாபு எனக் கூறி, அவருக்கு தன்னுடைய இதயத்தை கொடுக்கிறார்.  பாத்திமா பாபுவும் தனக்கு இதயத்தை தர்ஷனுக்கு கொடுக்கிறார்.  கடைசியாக நடிகை வனிதா தன்னுடைய இதயத்தை சேரனுக்கு கொடுக்கிறார். இதில் அதிகமாக இதயம் கிடைத்தவர் என்றால் சித்தப்பு சரவணன் தான். அனால் அவரும் இந்த முறை பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.