மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இதில் பலருடைய ஆதரவும், சாண்டிக்கு இருந்த நிலையில் அவர் தான் இம்முறை டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றுவார் என ரசிகர்கள் பலர் எதிர்பார்த்தனர்.

ஆனால் இறுதியில் சாண்டியின் ரசிகர்களுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. நிகழ்ச்சியின் முடிவில், முகேன் பிக்பாஸ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் பிரபலங்களுக்கு பதிவான ஓட்டுகள் விவரம் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் இறுதி போட்டியாளர்களுக்கு மொத்த ஓட்டுகள்: 20 கோடி 53 லட்சம் வாக்குகள் பதிவிடப்பட்டது. அதில்...

முகேன்: 7 கோடி 64 லட்சம் ஓட்டுகள்

சாண்டி: 5 கோடி 83 லட்சம் ஓட்டுகள் பதிவாகின.

லாஸ்லியா மற்றும் ஷெரின் என இருவருக்குமே சேர்த்து 6 கோடி வாக்குகள் மட்டுமே பதிவானதாக கூறப்படுகிறது.

அதாவது... சாண்டி கிட்ட தட்ட 2 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுள்ளார் என்பது இதில் இருந்து தெரிகிறது.