பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் போட்டியாளர்கள் எந்த ஒரு டாஸ்க்கும் இல்லாமல், ஜாலியாக இருந்தாலும், வரும் வாரங்களில் அவர்களுக்கு அடுக்கடுக்காக டாஸ்குகள் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நேற்றைய தினம் எலும்பு தூக்கி ஓடும், மிகவும் சிம்பிள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை தொடந்து தற்போதும் ஒரு சில டாஸ்குகள் கொடுக்கப்பட்டது வரிசையாக வரும் ப்ரோமோவில் இருந்து நமக்கு தெரிகிறது.

இதே போல் எதோ ஒரு டாஸ்க்கிற்கு உதவி செய்ததற்கு தான், மீரா மிதுன் மற்றும் கவினுக்குள் சண்டை வருகிறது. இறுதியில் மோகன் வைத்தியா கூட மீராவை கண்டிக்கும் காட்சி ப்ரோமோவில் வெளியானது. 

இதை தொடர்ந்து, வாழை பழம் டாஸ்க் ஒன்றில், ஒரு தார் வாழை பழத்தை பெற, வனிதா படும் கஷ்டங்களும், இறுதியில் டாஸ்கை வென்று, வாழை பழ தாரை கொண்டு செல்லும் காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது.