பிக்பாஸ் நிகழ்ச்சியின் 87வது நாளான இன்று நடைபெறவிருக்கும் ஒரு டாஸ்க்கில் நடன இயக்குநர் சாண்டி, கவினின் டார்லிங் லாஸ்லியாவைக் கீழே தள்ளிவிட்டுவிட்டு, அது தற்செயலாக நடந்ததாக கவினிடம் வாக்குவாதம் செய்வது பரபரப்பாகியுள்ளது. விரைவில் லாஸ்லியாவுக்காக இருவரும் அடித்துக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.

இன்னும் சரியாக இரண்டே வாரங்களில் நிகழ்ச்சி நிறைவுபெற உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது  கொஞ்சம் கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிறப்பாக செயல்படுபவர்களில் ஒருவரை நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட இருப்பதால், போட்டியாளர்களுக்குள் முன்பை விட  கடுமையாக மோதி வருகிறார்கள்.இந்த நிலையில், 87 வது நாளான இன்று கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில், லொஸ்லியாவை சாண்டி தள்ளிவிட, அவர் தடுமாறி கீழே விழுகிறார். இதைப்பார்த்து சாண்டி மீது கவின் கோபப்படுகிறார்.

 அதற்கு சாண்டி, மன்னிப்பு கேட்பதோடு, தெரியாமல் நடந்துவிட்டது, என்று கூறுகிறார். ஆனால், அதை ஏற்க மறுக்கும் கவின், நான் தான் பார்த்துக்கிட்டுதானே  இருக்கேனே, நீ வேணும்னே தான் தள்ளிவிட்ட” என்று கூறுகிறார்.உடனே சாண்டி, ரொம்ப பண்ணாதடா, வேணும் என்று யாராவது செய்வார்களா? புரிஞ்சிக்க, என்று கூற, அதற்கு கவின், யார் ரொம்ப பண்ணுவது, என்று மீண்டும் சாண்டி மீது கோபப்படுகிறார். இறுதியில் தர்ஷன் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ‘கேம்ன்னா இப்பிடிப்படத்தாண்டா செய்யும்’என்று ஒரு வழியாகப் பஞ்சாயத்தை முடித்து வைக்கிறார். முன்பு இப்படியெல்லாம் சண்டை இழுத்த வைக்க வனிதா தேவைப்பட்டார். ஆனால் இப்போது க்ளைமேக்ஸ் நெருங்குவதால் சுயமாகவே அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.