Asianet News TamilAsianet News Tamil

என்ன பேசுறீங்க...? சாண்டியை சீண்டிய கமல்! படு ஜோரில் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்ளும் தினங்களில், போட்டியாளர்களுக்கு கமல் என்ன கேள்வி கேட்க போகிறாரோ... என்ன தவறு செய்தோமோ என பக் பக் என இருந்தாலும், ரசிகர்கள் அவர் கேட்கும் கேள்விகளை மட்டும் அல்ல, ஹவுஸ் மெட்ஸ் சொல்லும் பதில்களையும் ரசிப்பார்கள்.
 

bigboss 3rd promo kamal raise the question for sandy
Author
Chennai, First Published Sep 21, 2019, 6:47 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்ளும் தினங்களில், போட்டியாளர்களுக்கு கமல் என்ன கேள்வி கேட்க போகிறாரோ... என்ன தவறு செய்தோமோ என பக் பக் என இருந்தாலும், ரசிகர்கள் அவர் கேட்கும் கேள்விகளை மட்டும் அல்ல, ஹவுஸ் மெட்ஸ் சொல்லும் பதில்களையும் ரசிப்பார்கள்.

இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், கவினிடம்,  லாஸ்லியா கீழே விழுந்ததற்கு உணர்ச்சிவச பட்டது குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவரை பதில் சொல்ல முடியாத அளவிற்கு திணறடித்தார்.

bigboss 3rd promo kamal raise the question for sandy

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள மூன்றாது ப்ரோமோவில், சிக்கியது வேறு யாரும் இல்லை சாண்டி தான். அதாவது லாஸ்லியா கீழே விழுந்த பின் தான் அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும். இதற்கு பிறகும் கவின் தன்னை திட்டுவது போல் பேசியது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்ததாக கூறுகிறார் சாண்டி.

bigboss 3rd promo kamal raise the question for sandy

இதை தொடர்ந்து பேசிய கமல் இந்த பிளவு ஏன் என கேட்க, மீண்டும் பேசிவிட்டதாக கமலுக்கு பதில் கூறுகிறார் சாண்டி. எங்க பேசுனீங்க என நக்கலாக கேட்கிறார் கமல். மேலும் கமல் கேட்கும் கேள்வியால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களோ குஷியாக கை தட்டுகிறார்கள்.

இது குறித்த ப்ரோமோ காட்சி இதோ...

Follow Us:
Download App:
  • android
  • ios