Asianet News TamilAsianet News Tamil

இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார்? தொடங்கியது நாமினேஷன்!

பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சி தொடங்கி நேற்றுடன் ஒரு வாரம் முடிவடைந்தது. முதல் வாரம் என்பதால், இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து எந்த பிரபலமும் வெளியேற்ற படவில்லை. ஆனால் இனி வரவிருக்கும் ஒவ்வொரு வாரமும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படியும் மக்களின் ஓட்டுகள் அடிப்படையிலும் பிரபலங்கள் வெளியேற்ற படுவார்கள்.
 

bigboss 3 nomination process started
Author
Chennai, First Published Jul 1, 2019, 11:23 AM IST

பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சி தொடங்கி நேற்றுடன் ஒரு வாரம் முடிவடைந்தது. முதல் வாரம் என்பதால், இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து எந்த பிரபலமும் வெளியேற்ற படவில்லை. ஆனால் இனி வரவிருக்கும் ஒவ்வொரு வாரமும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படியும் மக்களின் ஓட்டுகள் அடிப்படையிலும் பிரபலங்கள் வெளியேற்ற படுவார்கள்.

bigboss 3 nomination process started

அந்த வகையில் இன்று நாமினேஷன் செய்யும் படலம் துவங்கியுள்ளது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இருந்து தெரிகிறது. 

இன்றைய நாமினேஷனில் மீரா மிதுன்,  அபிராமி மற்றும் சாக்சியை  நாமினேட் செய்கிறார்.  மீராவை தொடர்ந்து அபிராமி, ஜாங்கிரி மதுமிதாவை நாமினேட் செய்கிறார். நடிகை ஷெரின் மதுமிதா மற்றும் மீராமிதுனை நாமினேஷன் செய்கிறார். 

bigboss 3 nomination process started

இவரை தொடர்ந்து பாத்திமாபாபு யாரும் எதிர்பார்க்காத வண்ணம்,  கவின், சரவணன் ஆகிய இருவரையும் நாமினேஷன் செய்கிறார். பின்  வனிதாவின் நாமினேஷன் காட்சி காட்டப்படுகிறது. அதில் அவர்  இயக்குனர் மற்றும் நடிகருமான சேரனை தனிப்பட்ட காரணத்திற்காக நாமினேட் செய்வதாக கூறி உள்ளார்.

இன்றைய நிகழ்ச்சியில் தான், பிரபலங்கள் நாமினேட் செய்வதற்கான காரணம் தெரியவரும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios