பிக்பாஸ் சீசன் 2 இனியாவது சூடு பிடிக்குமா என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டதாக கூறி, வெளியேற்றப்பட்ட வைஷ்ணவியை நிகழ்ச்சியாளர்கள் சீக்ரெட் அறையில் தங்க வைத்துள்ளனர்.

 

இதே போல் ஏற்கனவே, பிக்பாஸ் முதல் சீசனில் சுஜாவை சீக்ரெட் அறையில் அடைத்து வைத்து ஒரு நாள் கழித்து மீண்டும் பிக்பாஸ் வீட்டில் விட்டனர் நிகழ்ச்சியாளர்கள். அதே போல் வைஷ்ணவினையிம் இன்று அல்லது நாளை பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வருவார் என எதிர்ப்பார்க்கலாம்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவருக்கும் வெளிப்படையாகவே நாமினேஷன் நடைபெறுகிறது. அப்போது பாலாஜி தன்னை, அனைவரும் நாமினேட் செய்யுங்கள் என கூறுகிறார். இதற்கு மஹத் இங்கு இருக்கும் யாரும் உத்தமர்கள் இல்லை என கூறுகிறார்.

பின் பாலாஜி, தன்னை தானே நாமினேட் செய்து கொள்வதாகவும், தனக்கு இங்கு இருக்க விருப்பம் இல்லை என்றும் தயவு செய்து கதவை திறக்குமாறு கூறிகிறார். இவரின் இந்த முடிவால் அதிர்ச்சியான சக போட்டியாளர்கள் இவரை சமாதனம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

இதற்கு பாலாஜி, எதுவுமே இல்லை தன்னை அனுப்பிவிடுமாறு கூறுகிறார். இதைதொடர்ந்து மஹத் தன்னை நாமினேட் செய்யுங்கள் என கூற இதற்கு பாலாஜி முடியாது போடா... என கூறுகிறார். இதானால் கோவம் கொள்ளும் மஹத் வாடா போடா என்று கூப்பிட வேண்டாம் என கூறி, திடீர் என தன்னுடைய தலையில் அவரே அடித்து கொள்கிறார். ஏன் இப்படி நடந்து கொள்கிறார் மஹத், என்ன நடந்தது? என இன்று தான் தெரியவரும்.