பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் அடிக்கடி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டாலும், பின் மீண்டும் செய்த தவறை வருந்தி அதற்காக மன்னிப்பையும் கேட்கிறார்கள். 

ஆனால் முதல் சீசனில் அப்படி இல்லை. இதனால் தான் என்னவோ சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருபவர்கள், ஒரு வித போலி தனத்தோடு  விளையாடுவதாக பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமொவின் ஒரு குரல் ஒட்டு மொத்த பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் அழ வைத்துள்ளது. 

இந்த ப்ரோமோவில் தொகுப்பாளர் கமல் 'வீட்டிற்குள் இல்லாமலேயே அதிகமாக உலாவிய பெயர் போஷிகா... என கூறுகிறார். இதை தொடர்ந்து போஷிகா பாலாஜியிடம் 'டாடி எப்படி இருக்கீங்க, அழுவாதீங்க என கூறுகிறார். இவர் பேசும் போது பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் அழுகிறார்கள். 

பின் பாலாஜி தன்னுடைய மகளுக்கு 'ஐ லவ் யூ என்று கூற இதற்கு அவரது மகள் போஷிகாவும் ஐ லவ் யூ டூ'  என கூறுவது வெளியாகியுள்ளது.