பிக் பாஸ் நிகழ்ச்சி ஜூன் 23ஆம் தேதி, போட்டியாளர்களின் ஆட்டம், பாட்டத்தோடு கோலாகலமாக துவங்கியது. பிக்பாஸ் வீட்டை ரசிகர்களுக்கு சுற்றி காண்பித்து நிகழ்ச்சியைத் தொடங்கினார் தொகுப்பாளர் கமலஹாசன். 

பிக் பாஸ் நிகழ்ச்சி ஜூன் 23ஆம் தேதி, போட்டியாளர்களின் ஆட்டம், பாட்டத்தோடு கோலாகலமாக துவங்கியது. பிக்பாஸ் வீட்டை ரசிகர்களுக்கு சுற்றி காண்பித்து நிகழ்ச்சியைத் தொடங்கினார் தொகுப்பாளர் கமலஹாசன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 15 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளே நுழைந்தனர்.

இதனால் ரசிகர்கள் பிக்பாஸ் சீசனில் 15 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு விளையாட உள்ளதாக நினைத்த நிலையில், இரண்டாம் தினமான நேற்று திடீரென, 16வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார் மாடலிங் உலகை சேர்ந்த மீரா மிதுன்.

இவர் மிஸ் இந்தியா, மிஸ் சென்னை, உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ளார். ஆனால் சமீபத்தில் இவரிடமிருந்து மிஸ் இந்தியா பட்டம் ஒரு சில காரணங்களால் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. மேலும் 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…