big boss2 house galatta

பிக்பாஸ் சீசன் 2-ல் முதல் நாளான நேற்று, பெரிதாக எந்த பிரச்னையும் வெடிக்க வில்லை என்றாலும், சென்ராயன் மற்றும் மும்தாஜுக்கு சிறு பிரச்சனை முட்டிக்கொண்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதைத்தொடர்ந்து இந்த வாரம், பிக் பாஸ் போட்டியாளர்களை வழி நடத்தப்போகும், தலைவர் யார் என்று தீர்மானிக்க ஒரு சிறு போட்டி நடத்தப்பட்டது. அது என்னவென்றால் பிக் பாஸ் வீட்டில் மூன்று என்வலப் கவர் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. அதனை போட்டியாளர்கள் கண்டு பிடிக்க வேண்டும். இந்த கவர்களை கண்டு பிடிப்பவர்கள் இந்த வாரம் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மற்ற போட்டியாளர்களிடம் ஓட்டு கேட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி ஒளித்து வைக்கப்பட்டிருந்த கவர்களை, முதலில் கண்டு பிடித்தவர் நடிகர் மஹத், அடுத்ததாக ஜனனி ஐயர் கண்டு பிடித்தார். மூன்றாவதாக மும்தாஜ் கண்டு பிடித்தார். 

இவர்கள் மூன்று பேரும், தலைவர் போட்டியில் கலந்துக்கொள்ளும் இரண்டு பேர் பற்றி, அடுக்கடுக்காக பல குற்றம் சாற்றினர். நடிகை ஜனனி ஐயர், மஹத்தை விட தான் தலைமை பொறுப்பை சிறப்பாக செய்வேன் என்றும், மும்தாஜுக்கு தற்போது உடல் நிலை சரி இல்லை என்று கூறி தனி தனியாக போட்டியாளர்களை அழைத்து வாக்கு சேகரித்தார். 

நடிகை மும்தாஜ், அவர்கள் இருவரும் சின்னப்பசங்க என கூறி ஒரே வார்த்தையில் வாக்கு சேகரித்தார். எனினும் இந்த போட்டியில் நடிகை ஜனனி ஐயர் அதிகப்படியாக 8 வாக்குகள் பெற்று தலைவியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.