big boss2 conform contestants name leeked

தமிழ் மற்றும் தெலுங்கில், விரைவில் துவங்க உள்ள பிக் பாஸ்2 நிகழ்ச்சி தான் தற்போதைக்கு சினிமா வட்டாரத்தில் ஹாட் டாப்பிக். மேலும் இதில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர் என்று பல ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மேலும், அண்மைக்காலமாகவே, இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது.

விரைவில் தெலுங்கில் துவங்க உள்ள பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை, சமீபத்தில் ஸ்ரீலீக்ஸ் பிரச்சனையில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர் நானி தொகுத்து வழங்க உள்ளார். 

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதன் புரமோ மற்றும் போஸ்டருக்கான ஷூட்டிங்கை, நானியை வைத்து எடுத்து முடித்துவிட்டார்களாம் நிகழ்ச்சியாளர்கள்.

எனவே எந்த நேரத்திலும் இந்த டீசர் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாடகி கீதா மாதுரி, நிகழ்ச்சி தொகுப்பாளர் சியாமளா, தேஜஸ்வி மதிவதா ஆகிய மூன்று பெண் பிரபலங்கள், கலந்துக்கொள்ள உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. மற்ற போட்டியாளர்களுக்கான தேர்வுகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறதாம்.

இவர்கள் புகைப்படம் இதோ:

தொகுப்பாளர் சியாமளா:

பாடகி கீதா மாதுரி:

நடிகை தேஜஸ்வி மதிவதா: