முதல் முறையாக ஒரு தொகுப்பாளராக களமிறங்கி, நடிகர் கமலஹாசன் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும், பிரபலங்களிடமும் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பமானபோது, தமிழ் திரையுலகை சேர்ந்த 14 பிரபலங்களும், ஜல்லிக்கட்டில் பிரபலமான ஜூலி உட்பட 15 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், வாரம் ஒரு நபர் எலிமினேட் செய்யப்படுவார் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதி. இந்நிலையில்  இது வரை அனுயா, ஸ்ரீ ராம், கஞ்சா கருப்பு, ஆர்த்தி, பரணி என இது வரை நான்கு பேர் வெளியேறியுள்ளனர். 

இன்னும் 10 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் உள்ளனர். அடுத்ததாக யார் இதில் இருந்து வெளியேற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பும் அதிக அளவில் ரசிகர்களிடம் உள்ளது.

இந்த நிகழ்ச்சில் கலந்து கொண்டதற்காக போட்டியாளர்களுக்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டாலும் இவர்கள் ஜெயித்தால் இவர்களுக்கு என்ன பரிசு கிடைக்கும் எவ்வளவு பரிசு தொகை கிடைக்கும் என்கிற எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில். 

நேற்று நள்ளிரவு ஓவியாவை உசுப்பேற்றி திட்டி வந்த காயத்ரி, வின்னர் அவங்கதான்.. 50 லட்சத்தை வாங்காமல் போக மாட்டாங்க என்று வாய் உளறி சொல்லிவிட்டார். இதில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிப்பவருக்கு 50 லட்சம் பரிசு ரொக்க தொகையாக வழங்க உள்ளது தெரியவந்துள்ளது.