பிக்பாஸ் சீசன் 5 போட்டியில் 15 போட்டியாளராக, ராப் பாடகி ஒருவரும், அவரை தொடர்ந்து 16 ஆவது போட்டியாளராக கூத்து பட்டறை கலைஞர் தாமரை செல்வி என்பவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். 

பிக்பாஸ் சீசன் 5 போட்டியில் 15 போட்டியாளராக, ராப் பாடகி ஒருவரும், அவரை தொடர்ந்து 16 ஆவது போட்டியாளராக கூத்து பட்டறை கலைஞர் தாமரை செல்வி என்பவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 4 சீசனில் இல்லாத, இதுவரை யாரும் எதிர்பாராத பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே கடந்த சீசன்களை விட, இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. இதுவரை சினிமாவில் பிரபலமானவர்களை மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னிறுத்தி விளையாட வைத்த பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் இந்த முறை சற்று வித்தியாசமாகவே நிகழ்ச்சியை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

வழக்கம் போல் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமானவர்கள், மாடல்கள் இருந்தாலும், திருநங்கை, யூடியுப் விமர்சகர், மற்றும் குறிப்பாக கூத்து பட்டறை கலைஞர்களை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளனர். இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த கிராமிய கலையை இது வளர்க்கும் விதமாகவே உள்ளது என பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அதே போல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து, மாடலிங், அழகு கலை, மற்றும் ராப் பாடகியாக இருக்கும், ஐக்கி பெர்ரி என்பவரும் கலந்து கொண்டுள்ளார். இவர் வெளிநாட்டில் வளர்ந்தாலும், தான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தன்னுடைய தந்தை மற்றும் தாத்தா போன்ற பலர் விவசாயம் செய்தவர்கள் என தெரிவித்துள்ளார். இவருக்கு கமல் தன்னுடைய வாழ்த்துக்களை கூறி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார்.